02-01-2023 காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் இராஜரிஷிகள். தந்தை பழைய உலகம் முழுவதையும்
துறப்பதற்கு உங்களுக்குக்
கற்பிக்கிறார். இதனைச் செய்வதனால், உங்களால் ஓர் இராஜ அந்தஸ்தைக் கோருபவராக இயலும்.
கேள்வி:
ஏன் இந்நேரத்தில்
மனிதர்கள் செய்கின்ற செயற்பாடுகளில் எதுவும் நடுநிலையானதாக
இருக்க முடியாது?
பதில்:
ஏனெனில் முழு உலகிலும் மாயையின் இராச்சியமே உள்ளதால், அனைவரிலும் ஐந்து விகாரங்களும் பிரவேசித்துள்ளன, இதனாலேயே அவர்கள் செய்யும் செயற்பாடுகள்
பாவம் நிறைந்தவையாக
உள்ளன. சத்திய யுகத்தில் மாயை இருப்பதில்லை,
ஆகவே அங்கே மனிதர்கள் செய்கின்ற செயற்பாடுகள்
நடுநிலையானவையாக இருக்கின்றன.
கேள்வி:
எக் குழந்தைகள் மிகச்சிறந்த பரிசைப் பெறுகிறார்கள்?
பதில்:
ஸ்ரீமத்தின் அடிப்படையில்
தூய்மையாகி, குருடர்களுக்கான
கைத்தடிகள் ஆகுபவர்களும்,
ஒருபொழுதும் ஐந்து விகாரங்களினால் ஆதிக்கம் செலுத்தப்படாதவர்களும், குலத்தின் பெயரை அவதூறு செய்யாதவர்களுமே மிகச்சிறந்த
பரிசைப் பெறுகிறார்கள்.
மாயையினால் மீண்டும் மீண்டும் தோற்கடிக்கப்படுபவர்களின் கடவுச்சீட்டுகள்
இரத்துச் செய்யப்படுகின்றன.
பாடல்: ஓம் நமசிவாய.
ஓம் சாந்தி. கடவுளாகிய பரமாத்மாவாகிய பரமதந்தையே அனைவரிலும் அதி உயர்வானவர். அவரே படைப்பவர். அவர் முதலில் பிரம்மா, விஷ்ணு, சங்கரரைப் படைக்கிறார். பின்னர் நீங்கள் கீழிறங்கி அமரத்துவப் பூமிக்கு வரும்பொழுது, இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருக்கிறது. அது சூரிய வம்ச இராச்சியமே அன்றி, சந்திர வம்ச இராச்சியம் அல்ல. இதனை விளங்கப்படுத்துபவர் யார்? ஞானக் கடல் ஆவார். மனிதர்களால் ஒருபொழுதும் இதனை ஏனைய மனிதர்களுக்கு விளங்கப்படுத்த முடியாது. தந்தையே அனைவரிலும் அதி உயர்வானவர். அவரையே பாரத மக்கள் தாயும் தந்தையுமானவர் என அழைக்கிறார்கள். ஆகவே, நடைமுறை ரீதியில் தாயும், தந்தையும் நிச்சயமாகத் தேவைப்படுகிறார்கள். இது நினைவுகூரப்படுகிறது, ஆகவே ஏதோவொரு நேரத்தில் அவர் நிச்சயமாக இவ்வாறு இருந்திருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் முதலில், அதிமேலான அசரீரியான பரமாத்மாவாகிய பரமதந்தை உள்ளார். ஒவ்வொருவரிலும் ஓர் ஆத்மா உள்ளார். ஓர் ஆத்மா ஒரு சரீரத்தில் இருக்கும்பொழுது, அவர் சந்தோஷமானவராகவோ அல்லது சந்தோஷமற்றவராகவோ ஆகுகிறார். இவ்விடயங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இவை கட்டுக் கதைகள் அல்ல. குருமார்கள், சாதுக்கள் போன்ற அனைவரும் கட்டுக் கதைகளையே கூறுகிறார்கள். தற்சமயம் பாரதம் நரகமாக உள்ளது. சத்திய யுகத்தில் அது சுவர்க்கம் என அழைக்கப்படும். அங்கே இலக்ஷ்மியும், நாராயணனும் ஆட்சிசெய்தார்கள். அங்கே இருந்த அனைவரும் மிகவும் பாக்கியசாலிகளாக இருந்தார்கள்; அங்கே எவரும் துர்ப்பாக்கியசாலியாக இருக்கவில்லை. அங்கே துன்பமோ அல்லது நோய்களோ இருக்கவில்லை. இது பாவாத்மாக்களின் உலகமாகும். பாரத மக்கள் சுவர்க்கவாசிகளாக இருந்தார்கள். அது இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமாக இருந்தது. அனைவரும் கிருஷ்ணரை நம்புகிறார்கள். பாருங்கள், அவரிடம் இரு பூகோளங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணரின் ஆத்மா கூறுகிறார்: இப்பொழுது நான் நரகத்தை உதைத்துத் தள்ளி, சுவர்க்கத்தை எனது கரங்களில் ஏந்துகிறேன். முன்னர், கிருஷ்ணரின் பூமி இருந்தது. இப்பொழுது கம்சனின் (அசுரன்) பூூமியே உள்ளது. இதில் கிருஷ்ணரும் உள்ளடக்கப்பட்டுள்ளார். இது அவருடைய 84 பிறவிகளின் இறுதிப் பிறவி ஆகும். ஆனால் கிருஷ்ணர் இப்பொழுது அந்த ரூபத்தில் இல்லை. தந்தை இங்கமர்ந்திருந்து, விளங்கப்படுத்துகிறார். தந்தை வந்து, பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குகிறார். மீண்டும் ஒருமுறை நரகத்தைச் சுவர்க்கம் ஆக்குவதற்குத் தந்தை இப்பொழுது வந்துள்ளார். இது பழைய உலகமாகும். புதியதாக இருந்த உலகம் இப்பொழுது பழையதாகி விட்டது. கட்டடங்களும் புதியதிலிருந்து பழையதாகுகின்றன. இறுதியில், அவை இடிக்கப்படுவதற்குத் தயாராகுகின்றன. தந்தை கூறுகிறார்: குழந்தைகளாகிய உங்களைச் சுவர்க்கவாசிகள் ஆக்குவதற்காக, நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறேன். நீங்கள் இராஜரிஷிகள். நீங்கள் ஓர் இராச்சியத்தைக் கோருவதற்காக, விகாரங்களைத் துறக்கிறீர்கள். அச்சந்நியாசிகள் தங்கள் வீடுகளைத் துறந்து, காட்டுக்குச் செல்கிறார்கள். எவ்வாறாயினும், அவர்கள் இன்னமும் பழைய உலகிலேயே இருக்கிறார்கள். எல்லையற்ற தந்தை உங்களுக்குச் சுவர்க்கத்தின் காட்சியொன்றை அருள்வதனால், நரகத்தைத் துறப்பதற்கு உங்களைத் தூண்டுகிறார். தந்தை கூறுகிறார்: நான் உங்கள் அனைவரையும் திரும்பவும் அழைத்துச் செல்வதற்கு வந்துள்ளேன். நீங்கள் உங்களுடைய சொந்தப் பிறவிகளையே அறியாதவர்களாக இருப்பதாகத் தந்தை உங்கள் அனைவருக்கும் கூறுகிறார். நல்ல அல்லது தீய செயல்கள் என மக்கள் என்ன செயல்களைச் செய்தாலும், அந்தச் சம்ஸ்காரங்களுக்கு ஏற்பவே, அவர்கள் பிறப்பெடுக்கிறார்கள். சிலர் செல்வந்தர்கள் ஆகுகின்றார்கள், சிலர் ஏழைகள் ஆகுகின்றார்கள், சிலர் நோய்வாய்;ப்படுகின்றார்கள், ஏனையோர் ஆரோக்கியமானவர்கள் ஆகுகிறார்கள். அவை அவர்களுடைய முன்னைய பிறவியின் கர்மக் கணக்குகள் ஆகும். ஆரோக்கியமாக இருப்பவர்கள் நிச்சயமாகத் தங்கள் முன்னைய பிறவியில் வைத்தியசாலை போன்றவற்றைக் கட்டியிருப்பார்கள். பெருமளவு தான, தர்மம் செய்பவர்கள் செல்வந்தர்கள் ஆகுகிறார்கள். மனிதர்கள் நரகத்தில் என்ன செயல்களைச் செய்தாலும், அவை நிச்சயமாகப் பாவம் மிக்கவை ஆகுகின்றன, ஏனெனில் அனைவரிலும் ஐந்து விகாரங்கள் பிரசன்னமாகியுள்ளன. இப்பொழுது, சந்நியாசிகள் தூய்மையைக் கடைப்பிடித்து, பாவம் செய்வதை நிறுத்தியுள்ளார்கள். அவர்கள் ஒரு காட்டுக்குச் சென்று வசித்தாலும், அவர்களுடைய செயல்கள் நடுநிலையானவை ஆகுவதில்லை. தந்தை விளங்கப்படுத்துகிறார்: தற்சமயம், மாயையின் இராச்சியமே உள்ளது. ஆகவே, மனிதர்கள் செய்கின்ற செயல்கள் பாவம் நிறைந்தவையாக மாத்திரமே இருக்கும். மாயை சத்திய, அல்லது திரேதா யுகத்தில் இருப்பதில்லை; இதனாலேயே அங்கே மக்களின் செயல்கள் ஒருபொழுதும் பாவம் நிறைந்தவை ஆகுவதில்லை, அதனாலேயே அங்கே துன்பமும் இருப்பதில்லை. தற்சமயம், முதலில் இராவணனின் சங்கிலிகளும், பின்னர் பக்தி மார்க்கத்தின் சங்கிலிகளும் உள்ளன. நீங்கள் ஒவ்வொரு பிறப்பிலும் தடுமாறி வந்துள்ளீர்கள். தந்தை கூறுகிறார்: தவம் செய்வதாலும் அல்லது தீவிரமான தியானம் போன்றவற்றைச் செய்வதாலும் உங்களால் என்னைச் சந்திக்க முடியாது என நான் உங்களுக்கு முன்னரும் கூறினேன். பக்தி மார்க்கத்தின் முடிவில் மாத்திரமே நான் வருகிறேன். பக்தி துவாபர யுகத்தில் ஆரம்பமாகுகிறது. மக்கள் துன்பத்தை அனுபவம் செய்யும்பொழுது, கடவுளை நினைவுசெய்கிறார்கள். சத்திய, திரேதா யுகங்களில் அனைவருமே நூறுமடங்கு பாக்கியசாலிகள், ஆனால் இங்கோ அனைவரும் துர்ப்பாக்கியசாலிகள்; அவர்கள் தொடர்ந்தும் அழுது புலம்புகிறார்கள், தொடர்ந்தும் அகால மரணம் ஏற்படும். தந்தை கூறுகிறார்: நரகம் சுவர்க்கமாக மாறவுள்ளபொழுது, நான் வருகிறேன். பாரதமே புராதன தேசம் ஆகும். ஆரம்பத்தில் வருபவர்கள் இறுதிவரை இருக்க வேண்டும். 84 பிறவிகளின் சக்கரம் நினைவுகூரப்பட்டு வந்துள்ளது. அரசாங்கம் உருவாக்குகின்ற திரிமூர்த்தியில் பிரம்மா, விஷ்ணு, சங்கரர் உள்ளடக்கப்பட வேண்டும், ஆனால் அவர்கள் அதற்குப் பதிலாக ஒரு சிங்கத்தைச் சித்தரித்துள்ளார்கள். அதில் படைப்பவராகிய தந்தையின் உருவமில்லை, ஆனால் அவர்கள் சக்கரத்தின் உருவத்தைக் கீழே இட்டுள்ளார்கள். அது ஒரு சுழலும் சக்கரம் என அவர்கள் எண்ணுகிறார்கள், ஆனால் அது உண்மையில் நாடகச் சக்கரமாகும். அவர்கள் அதற்கு (அசோகச் சக்கரம்) துன்பமற்ற சக்கரம் எனப் பெயரிட்டுள்ளார்கள். இச்சக்கரத்தை அறிந்துகொள்வதால், நீங்கள் இப்பொழுது துன்பத்திலிருந்து விடுபட்டவர்கள் ஆகுகிறீர்கள். உண்மையில், இது சரியானது, ஆனால் அவர்கள் அனைத்தையும் தலைகீழாக மாற்றி விட்டார்கள். 84 பிறவிகளின் சக்கரத்தை நினைவுசெய்வதால், நீங்கள் 21 பிறவிகளுக்குப் பூகோளத்தை ஆட்சிசெய்பவர்கள் ஆகுகிறீர்கள். இந்தத் தாதா தனது 84வது பிறவியைப் பூர்த்தி செய்கிறார். இதுவே கிருஷ்ணரின் இறுதிப் பிறவி ஆகும். தந்தை இங்கமர்ந்திருந்து, இவருக்கு விளங்கப்படுத்துகிறார். உண்மையில், இது உங்கள் அனைவரினதும் இறுதிப் பிறவி ஆகும். தேவ தர்மத்துக்கு உரியவர்களாக இருந்த பாரத மக்களே முழுமையான 84 பிறவிகளை அனுபவம் செய்துள்ளார்கள். இப்பொழுது அனைவருக்கும் சக்கரம் முடிவுக்கு வருகிறது. உங்களுடைய அந்தச் சரீரங்கள் அழுக்கானவையாகி விட்டன. இவ்வுலகம் மிகவும் தீயது; அதனாலேயே அதனைத் துறக்குமாறு நீங்கள் தூண்டப்படுகிறீர்கள். நீங்கள் உங்களுடைய இதயங்களை இந்த இடுகாட்டுடன் இணைக்கக்கூடாது. உங்கள் இதயங்களைத் தந்தையுடனும், உங்கள் ஆஸ்தியுடனும் இணையுங்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் அழிவற்றவர்கள், உங்கள் சரீரங்கள் அழியக்கூடியவை. இப்பொழுது என்னை நினைவுசெய்யுங்கள், உங்கள் இறுதி எண்ணங்கள் உங்களை உங்கள் இலக்குக்கு இட்டுச் செல்லும். தங்கள் மனைவியை இறுதிக் கணங்களில் நினைவுசெய்பவர்கள், அதற்கேற்பவே ஓர் அந்தஸ்தை அடைகிறார்கள் என நினைவுகூரப்படுகிறது. தந்தை கூறுகிறார்: இப்பொழுது, சிவபாபாவை இறுதியில் நினைவுசெய்பவர்களால் நாராயணனின் அந்தஸ்தை அடைய முடியும். நீங்கள் சத்திய யுகத்தில் நாராயணனின் அந்தஸ்தைப் பெறுகிறீர்கள். தந்தையைத் தவிர, வேறு எவராலும் உங்களை இந்த அந்தஸ்தை அடையச் செய்ய முடியாது. மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுவதற்காகவே இப்பாடசாலை உள்ளது. ‘ஓம் நமசிவாய’ என எவருடைய புகழை நீங்கள் செவிமடுத்தீர்களோ, அந்தத் தந்தையே கற்பிக்கிறார். நீங்கள் அவருடைய குழந்தைகளாகியுள்ளீர்கள் என்பதையும், இப்பொழுது உங்கள் ஆஸ்தியைக் கோருகிறீர்கள் என்பதையும் அறிவீர்கள். நீங்கள் இப்பொழுது மனிதர்களின் கட்டளைகளைப் பின்பற்றுவதில்லை. மனிதர்களின் கட்டளைகளைப் பின்பற்றுவதனால், அனைவரும் நரகவாசிகளாகி விட்டார்கள். நினைவுகூரப்படுகின்ற சமயநூல்கள் அனைத்தும் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. முழுப் பாரதமுமே இப்பொழுது தங்கள் தர்மத்திலும், செயல்களிலும் சீரழிந்துள்ளது. தேவர்கள் தூய்மையாக இருந்தார்கள். தந்தை இப்பொழுது கூறுகிறார்: நீங்கள் நூறு மடங்கு பாக்கியசாலியாக விரும்பினால், தூய்மையாகுங்கள். நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாகி, அவரிடமிருந்து உங்கள் முழு ஆஸ்தியையும் கோருவீர்கள் என பாபாவுக்குச் சத்தியம் செய்யுங்கள். இப்பழைய, தூய்மையற்ற உலகம் முடிவடைய வேண்டும். அதிகளவு சண்டை, சச்சரவு உள்ளது. அதிகளவு கோபம் உள்ளது. மக்கள் அத்தகைய பெரிய குண்டுகளை உருவாக்கியுள்ளார்கள். அவர்களுக்கு அதிகளவு கோபமும், பேராசையும் உள்ளன. ஸ்ரீ கிருஷ்ணர் எவ்வாறு கருப்பை என்னும் மாளிகையிலிருந்து வெளிப்படுகிறார் என்னும் காட்சிகளைச் சில குழந்தைகள் கண்டுள்ளார்கள்;. இங்கே, கருப்பை ஒரு சிறையாக உள்ளது, நீங்கள் அதிலிருந்து விடுதலையானவுடனேயே, மாயை உங்களைப் பாவம் செய்ய வைக்கிறாள். அங்கே, குழந்தை கருப்பை எனும் மாளிகையிலிருந்து வெளிப்படும்பொழுது, எங்கும் ஒளி நிலவுகிறது. அவர் பெரும் சௌகரியத்தில் வாழ்கிறார். அவர் கருப்பையிலிருந்து வெளிப்படும்பொழுது, பணிப்பெண்கள் அவரைக் கையில் ஏந்துகிறார்கள், எங்கும் பேரிகைகள் ஒலிக்க ஆரம்பிக்கின்றன. இங்கே உள்ளவற்றுக்கும், அங்கே உள்ளவற்றுக்கும் இடையில் அதிகளவு வேறுபாடு இருக்கின்றது! குழந்தைகளான உங்களுக்கு மூவுலகங்களும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளன. ஆத்மாக்கள் அமைதி தாமத்திலிருந்து வருகின்றார்கள். ஓர் ஆத்மா ஒரு நட்சத்திரத்தைப் போன்றவர், அவர் (ஆத்மா) நெற்றியின் மத்தியில் வசிக்கிறார். ஆத்மாவில் 84 பிறவிகளின் அழிவற்ற பதிவு உள்ளது. நாடகம் ஒருபொழுதும் அழிக்கப்படுவதில்லை, எவருடைய பாகமும் மாற்றப்பட முடியாது. அது ஓர் அற்புதம்! இந்தச் சின்னஞ்சிறிய ஆத்மாவில் மிகச்சரியாக 84 பிறவிகளின் பாகம் பதியப்பட்டுள்ளது. அது ஒருபொழுதும் பழையதாக ஆகுவதில்லை; அது சதா புதியதாகவே உள்ளது. ஆத்மா மீண்டும் ஒருமுறை தனது அச்சொட்டான அதே பாகத்தை ஆரம்பிக்கிறார்.: “ஒவ்வோர் ஆத்மாவும் பரமாத்மாவே”; எனக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது கூற மாட்டீர்கள். தந்தை உங்களுக்கு ‘ஹம்சோ’ என்பதன் மிகச்சரியான அர்த்தத்தை விளங்கப்படுத்துகிறார். அம்மக்கள் உருவாக்கியுள்ள அர்த்தம் தவறானதாகும். தாங்கள் பிரம்மம் எனவோ அல்லது தாங்கள் மாயையைப் படைப்பவராகிய கடவுள் எனவோ அவர்கள் கூறுகிறார்கள். உண்மையில், மாயையை உருவாக்க முடியாது. ஐந்து விகாரங்களே மாயை ஆகும். தந்தை மாயையைப் படைப்பதில்லை. தந்தை புதிய உலகைப் படைக்கிறார். தாங்கள் ஓர் உலகைப் படைப்பதாக வேறு எவராலும் கூற முடியாது. ஒரேயொரு எல்லையற்ற தந்தையே இருக்கிறார். குழந்தைகளாகிய உங்களுக்கு ‘ஓம்’ என்பதன் அர்த்தமும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஓர் ஆத்மா அமைதி சொரூபம், அவர் அமைதி தாமத்தில் வசிக்கிறார். தந்தையே ஞானக் கடலும், பேரானந்தக் கடலும் ஆவார். உங்களால் ஓர் ஆத்மாவையிட்டு, இப்புகழைப் பாட முடியாது. ஆம், ஆத்மாக்களுக்கு ஞானம் உள்ளது. தந்தை கூறுகிறார்: நான் ஒருமுறை மாத்திரமே வருகிறேன். நான் நிச்சயமாக உங்களுக்கு உங்கள் ஆஸ்தியைக் கொடுக்க வேண்டும். நான் உங்களுக்குக் கொடுக்கின்ற ஆஸ்தியினூடாகப் பாரதம் சுவர்க்கம் ஆகுகிறது. அங்கே தூய்மையும், அமைதியும், சந்தோஷமும் உள்ளன. எல்லையற்ற தந்தையால் கொடுக்கப்பட்டுள்ள சதா சந்தோஷமே இந்த ஆஸ்தி ஆகும். தூய்மை இருந்தபொழுது, அமைதியும், சந்தோஷமும் இருந்தன. இப்பொழுது தூய்மையின்மையே உள்ளது, ஆகவே துன்பமும், அமைதியின்மையும் உள்ளன. தந்தை இங்கமர்ந்திருந்து, விளங்கப்படுத்துகிறார்: முதலில், ஆத்மாக்களான நீங்கள் அசரீரி உலகில் இருந்தீர்கள். பின்னர் ஆத்மாக்களாகிய நீங்கள் தேவ தர்மத்துக்குள்ளும், பின்னர் சத்திரிய தர்மத்துக்குள்ளும் சென்றீர்கள். நீங்கள் எட்டுப் பிறவிகளுக்குச் சதோபிரதானாக இருந்தீர்கள். பின்னர், 12 பிறவிகளுக்கு நீங்கள் சதோ ஸ்திதியைக் கொண்டிருந்தீர்கள். பின்னர், 21 பிறவிகளுக்கு, நீங்கள் துவாபர யுகத்தில் இருந்தீர்கள், பின்னர் நீங்கள் கலியுகத்தில் 42 பிறவிகளை எடுத்தீர்கள். இங்கே நீங்கள் சூத்திரர்களாகி, மீண்டும் இப்பொழுது பிராமணக் குலத்துக்குள் வந்துள்ளீர்கள். பின்னர் நீங்கள் தேவ தர்மத்துக்குள் செல்வீர்;கள். நீங்கள் இப்பொழுது கடவுளின் மடியில் இருக்கிறீர்கள். தந்தை உங்களுக்கு மிகவும் தெளிவாக விளங்கப்படுத்துகிறார். 84 பிறவிகளை அறிந்துகொள்வதால், நீங்கள் அனைத்தையும் அறிந்து கொள்கிறீர்கள். உங்கள் புத்தியில் முழுச் சக்கரத்தின் ஞானமும் உள்ளது. சத்திய யுகத்தில் ஒரேயொரு தர்மமே உள்ளது என்பதையும் நீங்கள் அறிவீர்கள்: உலகச் சர்வசக்திவான் இராச்சியம். நீங்கள் இப்பொழுது இலக்ஷ்மி நாராயணனின் அந்தஸ்தைக் கோருகிறீர்கள். சத்திய யுகமே தூய உலகமாகும், அங்கே மிகச்சிலரே இருக்கிறார்கள். ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் முக்தி தாமத்தில் இருக்கிறார்கள். ஒரேயொரு தந்தையே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர். எவரும் அவரை அறியார். கடவுள் சர்வவியாபி என அவர்கள் கூறுகிறார்கள். தந்தை வினவுகிறார்: உங்களுக்கு அதனைக் கூறியவர் யார்? அவர்கள் கூறுகிறார்கள்: அது கீதையில் எழுதப்பட்டுள்ளது. கீதையைப் படைத்தவர் யார்? கடவுள் பேசுகிறார்: நான் பிரம்மாவின் இச்சாதாரண சரீரத்தையே ஆதாரமாக எடுக்கிறேன். கடவுளால் எவ்வாறு அமர்ந்திருந்து, யுத்த களத்தில் ஒரேயொரு அர்ச்சுனனுக்கு மாத்திரம் ஞானத்தைக் கொடுக்க முடியும்? உங்களுக்கு யுத்தம் செய்யவோ அல்லது சூதாடவோ கற்பிக்கப்படுவதில்லை. கடவுளே மனிதர்களைத் தேவர்களாக மாற்றுபவர். அவரால் எவ்வாறு உங்களுக்குச் சூதாடுமாறோ அல்லது யுத்தம் செய்யுமாறோ கூற முடியும்? பின்னர் அவர்கள் திரௌபதிக்கு ஐந்து கணவர்கள் இருந்தார்கள் எனக் கூறுகிறார்கள். அது எவ்வாறு சாத்தியமாக முடியும்? ஒரு கல்பத்தின் முன்னரும் பாபா சுவர்க்கத்தை உருவாக்கினார். அவர் இப்பொழுது அதனை மீண்டும் ஒருமுறை உருவாக்குகிறார். இப்பொழுது கிருஷ்ணர் தனது 84வது பிறவியைப் பூர்த்தி செய்கிறார். அரசர், அரசி, பிரஜைகள் அனைவரும் இப்பொழுது தங்கள் 84 பிறவிகளையும் பூர்த்தி செய்கிறார்கள். நீங்கள் இப்பொழுது சூத்திரர்களிலிருந்து பிராமணர்களாக மாறி விட்டீர்கள். பிராமண தர்மத்தினுள் வருபவர்கள் “மம்மா, பாபா” எனக் கூறுகிறார்கள். எவ்வாறாயினும், அவர்கள் அதனை நம்புகிறார்களோ, இல்லையோ, அது அவர்களைப் பொருத்தது. தாங்கள் அடைவதற்கு இலக்கானது மிகவும் உயர்வாக உள்ளதாகச் சிலர் எண்ணுகிறார்கள். எவ்வாறாயினும், அவர்கள் சிறிதளவைக் கேட்டுள்ளதால், நிச்சயமாகச் சுவர்க்கத்துக்குச் செல்வார்கள், ஆனால் அவர்கள் ஒரு தாழ்ந்த அந்தஸ்தையே கோருவார்கள். அங்கே, ஆட்சிசெய்பவர்களைப் போன்றே, பிரஜைகளும் இருக்கிறார்கள்;; அனைவரும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள். அதன்பெயரே சுவர்க்கம் ஆகும். தந்தையாகிய சுவர்க்கக் கடவுளே சுவர்க்கத்தை ஸ்தாபிக்கிறார். இது நரகம் ஆகும். இராவணன் சீதைகள் அனைவரையும் சிறையில் இட்டு விட்டான். அவர்கள் அனைவரும் துன்பக் குடிலில் அமர்ந்திருந்து, இராவணனிடமிருந்து விடுதலையடைவதற்காக, கடவுளை நினைவுசெய்கிறார்கள். சத்திய யுகம் துன்பமற்ற குடிலாகும். உங்கள் சூரிய வம்சத்து இராச்சியம் ஸ்தாபிக்கப்படும்வரை, விநாசம் இடம்பெற முடியாது. இராச்சியம் ஸ்தாபிக்கப்பட்டு, குழந்தைகள் தங்கள் கர்மாதீத ஸ்திதியை அடையும்பொழுது மாத்திரமே இறுதி யுத்தம் இடம்பெறும். அதுவரை, ஒத்திகைள் தொடரும். இந்த யுத்தத்தினூடாக, சுவர்க்க வாயில்கள் திறக்கும். குழந்தைகளாகிய நீங்கள் சுவர்க்கத்துக்குச் செல்லத் தகுதிவாய்ந்தவர்களாக வேண்டும். பாபா உங்கள் கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கிறார். நீங்கள் எந்தளவிற்குத் தூய்மையானவர்கள் ஆகுகிறீர்களோ, எந்தளவிற்கு அதிகமாகக் குருடர்களுக்கான கைத்தடிகள் ஆகுகிறீர்களோ, அதற்கேற்பவே நீங்கள் பெறுகின்ற பரிசும் சிறந்ததாக இருக்கும். நீங்கள் பாபாவுக்குச் சத்தியம் செய்ய வேண்டும்: இனிய பாபா, நாங்கள் நிச்சயமாக உங்களுடைய நினைவில் நிலைத்திருப்போம். தூய்மையே பிரதான விடயமாகும். நீங்கள் நிச்சயமாக ஐந்து விகாரங்களையும் தானம் செய்ய வேண்டும். சிலர்; தோற்கடிக்கப்படுகிறார்கள், பின்னர் அவர்களால் எழுந்து நிற்க இயலுகிறது. மாயையால் இரண்டு முதல் நான்கு தடவைகள் வீழ்த்தப்பட்டால், நீங்கள் தோற்கடிக்கப்படுவதுடன், உங்கள் கடவுச்சீட்டும் இரத்துச் செய்யப்படுகிறது. தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, குலத்தின் பெயரை அவதூறு செய்பவர்கள் ஆகாதீர்கள். நீங்கள் விகாரங்களைத் துறந்தால், நான் நிச்சயமாக உங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குவேன். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
- நூறு மடங்கு பாக்கியசாலி ஆகுவதற்கு, நீங்கள் தூய்மையாக இருப்பீர்கள் எனத் தந்தைக்குச் சத்தியம் செய்யுங்கள். உங்கள் இதயத்தை இந்த அசுத்தமான, தூய்மைற்ற உலகுடன் இணைக்காதீர்கள்.
- ஒருபொழுதும் மாயையினால் தோற்கடிக்கப்படாதீர்கள். குலத்தின் பெயரை அவதூறு செய்பவர்கள் ஆகாதீர்கள். தந்தையிடமிருந்து சுவர்க்கத்திற்கான உங்கள் கடவுச்சீட்டைக் கோருவதற்குத் தகுதியானவர்கள் ஆகுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் சதா
ஒரு சக்தி
சொரூபமாக இருந்து,
உங்கள் மனதை
மும்முரமாக வைத்திருந்து,
வீணானவற்றிலிருந்து விடுபட்டிருக்கின்ற
கலையைப் பயிற்சி
செய்வீர்களாக.
இன்றைய உலகில், அதியுயர் தராதரங்களில் இருக்கின்ற மக்கள் தங்களுடைய நேரத்திற்கேற்ப,
தங்கள் நாளாந்த நேர அட்டவணையை அமைத்துக் கொள்கின்றார்கள். அதேபோல், உலகப் புத்தாக்கத்திற்கான ஆதார ரூபங்களும், இந்த எல்லையற்ற நாடகத்தில் கதாநாயக நடிகர்களாக இருப்பவர்களும், ஒரு வைரத்தைப் போன்ற பெறுமதியான வாழ்வுகளை உடையவர்களுமான நீங்கள் அனைவரும் உங்கள் மனங்களையும், புத்திகளையும்
ஒரு சக்திவாய்ந்த
ஸ்திதியில் ஸ்திரமாக்கி,
அவற்றுக்கான ஒரு நிகழ்ச்சித் திட்டத்தை உருவாக்க வேண்டும். உங்கள் மனதை மும்முரமாக வைத்திருக்கின்ற கலையைப் பயன்படுத்தினால், நீங்கள் வீணானவை அனைத்திலிருந்தும் விடுபட்டிருப்பீர்கள். நீங்கள் என்றுமே குழப்பமடைய மாட்டீர்கள்.
சுலோகம்:
நாடகத்தின் ஒவ்வொரு காட்சியையும் பார்ப்பதில் சந்தோஷமாக இருங்கள், நீங்கள் என்றுமே நல்லவற்றின் அல்லது தீயவற்றின் கவர்ச்சி எதிலும் சிக்கிக் கொள்ள மாட்டீர்கள்.
---ஓம் சாந்தி---
0 Comments